வதோதரா:

குஜராத்தில் புதிதாக 10 ஆயிரம் போலீஸார் தேர்வு செய்யப்படவுள்ளதாக அம்மாநில உள்துறை இணை அமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா தெரிவித்துள்ளார்.


போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்துச் செல்லும் போலீஸாரின் அணிவகுப்பில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் 50 ஆயிரம் போலீஸார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், குஜராத்துக்கு இன்னும் போலீஸார் தேவைப்படுகிறார்கள். இதனையடுத்து, மேலும் 10 ஆயிரம் போலீஸாரை நியமிக்க முதல்வர் விஜய் ருபானி ஒப்புதல் அளித்துள்ளார்.

படித்தவர்களை போலீஸ் பணிக்கு தேர்வு செய்ததால்,போலீஸார் வலிமையுடன் பணியாற்றி வருகிறார்கள்.

துல்லிய விசாரணை மற்றும் குற்ற விகிதங்களை குறைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
போலீஸ் பயிற்சி பள்ளிகளுக்கு நவீன ஆயுதங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறோம் என்றார்.