நடிகை வனிதா விஜயகுமார் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை கடந்த 27-ம் தேதி மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்
இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகாரளித்தார்.
இதில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர், கஸ்தூரி , சூர்யாதேவி உள்ளிட்டோர் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் வனிதாவுக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் காரசாரமாக விவாதங்கள் ஓடி கொண்டிருந்தது .
இந்நிலையில் போரூரில் நடிகை வனிதா சூர்யா தேவி மீது புகார் ஒன்றை அளித்தார். அவதூறு பரப்புவது, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி புகார் அளித்திருந்தார். மேலும் வடபழனியில் நடிகை வனிதா மீது சூர்யா தேவி புகார் அளித்திருந்தார்.
இந்த அனைத்து வழக்குகளும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது . நடிகை வனிதாவையும், சூர்யா தேவியையும் போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். இதுபோன்று வீடியோக்கள் அவதூறு செய்து வெளியிடக்கூடாது என இருவரையும் போலிசார் எச்சரித்தனர்.
இதனை மீறி சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதாவை விமர்சித்துள்ளார் .
இதனால் வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூர்யா தேவியை கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட சூர்யா தேவியை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் சூர்யா தேவியை ஜாமினில் விடுதலை செய்து உத்தரவு பிறபித்தார்.