தமிழ்த் திரையுலகின் காதல் மன்னனாக வலம் வருபவர் சிம்பு . இவரைப் பற்றி காதல், திருமணம் என பல்வேறு வதந்திகள், செய்திகள் என வெளியாகியுள்ளன.
இந்நிலையில் திடீரென்று சிம்பு – த்ரிஷா இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கடந்த 2 நாட்களாக செய்தி உலவி வருகிறது.இந்த திருமண செய்தி வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பாக விசாரித்த போது, “சிம்பு – த்ரிஷா இருவருமே நெருங்கிய நண்பர்கள். அந்த நட்பு இப்போது வரை நட்பாக மட்டுமே இருக்கிறது. இருவரும் திருமணம் செய்ய வாய்ப்பே இல்லை. எப்படி இந்த வதந்தி உருவானது என்றே தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்கள்.