காந்திநகர்: இந்தியாவின் முதல் வந்ததேபாரத் அதிவேக ரயில் குஜராத்தின் காந்திநகர் மும்பை இடையே தொடங்கப்பட்ட நிலையில், 4வது முறையாக மாடு மீது மோதி சேதடைந்துள்ளது. வந்தே பாரத்தை ரயிலை குறிவைத்து மாடுகள் மோதுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த ரயில்  சேவை தொடங்கி 3 மாதங்களுக்குள் 4வது முறையாக மாடு மீது மோதி சேதடைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் தொடங்கிய அன்றே மாடுமீது மோடி ரயிலின் முன்பகுதி சேதடைந்தது. தொடர்ந்து, ஏற்கனவே குஜராத் காந்தி நகர்- மும்பை இடையே செல்லும் வழிலயில் 3முறை கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கி முன்பக்கம் பகுதி பழுதடைந்தது.

இந்த நிலையில், தற்போது 4வது முறையாக மாடுமீது மோதி சேதமடைந்துள்ளது. குஜராத் தலைநகர்  காந்தி நகரில் இருந்து மும்பை செல்லும் வழியில் நேற்று மாலையில் மாடு மீது மோதியது.   இதனால் ரயிலின் முன்பக்க பேனலில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர்,   நேற்று மாலையில் 6. 23 மணியளவில் குஜராத்தின் உத்வாடா – வாபி இடையே லெவல் கிராசிங் கேட் எண் 87 க்கு அருகில் கால்நடை மீது ரயில் மோதியது.   இதனால் ரயிலின் முன்பக்க முன் பகுதியில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி  எந்த செயல்பாட்டு சிக்கல்களும் இல்லை.  இந்த சேதம் இரவில் சரி செய்யப்பட்டு விடும்.  சிறிது நேரம் நிறுத்தப்பட்ட ரயில் பின்னர் 6.35 மணிக்கு மீண்டும் பயணத்தை தொடங்கி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

குஜராத் வந்தே பாரத் ரயில் தொடர்ந்து நான்காவது முறையாக மாடு மீது மோதி சேதம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.