புதுடெல்லி:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்குக் குறைந்தது ஒரு முறையாவது கூட வேண்டும் என்ற விதி உள்ளது. நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் நவ. மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும். இந்தாண்டு இமாச்சல பிரதேச மற்றும் குஜராத் சட்டசபைத் தேர்தல் காரணமாக இது சற்றே தாமதமானது.

இந்தாண்டிற்கான குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரம் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இந்த குளிர்காலக் கூட்டத் தொடர் டிச. 7 முதல் டிச.29 வரை நடைபெற உளது.

அமர்வின் முதல் நாள் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முலாயம் சிங் யாதவ் மூத்த அரசியல் தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது.

இரண்டாம் நாளில் இருந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதேநேரம், இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பொருளாதார சூழல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.