வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Must read

கோவை:
வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளதை அடுத்து, மாணவர்களின் பாதுகாப்பை கருதி வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article