அரசியலில் கவனம் செலுத்தத் திரையுலகிலிருந்து விலகினார் பவன் கல்யாண். ஆனால், அரசியலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

ஸ்ரீராம் வேணு இயக்கும் இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிங்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கிறார் .

இந்தப் படத்தை போனி கபூர் மற்றும் தில் ராஜு இணைந்து தயாரித்துள்ளனர். ‘வக்கீல் சாப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (செப்டம்பர் 2) பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.