சென்னை

வைகோ மகன் துரை வையாபுரி மதிமுகவின் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதிமுகவின் பொதுச் செயலராக வைகோ பதவி வகித்து வருகிறார்.  இவரது மகனான துரை வையாபுரிக்குக் கட்சியில் பதவி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.  இதையொட்டி அவருக்குக் கட்சியில் பொறுப்பு அளிப்பது குறித்து கருத்துக் கணிப்பு வாக்குப்பதிவு நடந்தது.

இன்று துரை வையாபுரி மதிமுக செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.   அவரது தந்தை வைகோ தொடங்கி தற்போது அவர் பொதுச் செயலராக இருக்கும் நிலையில் துரை வையாபுரிக்குப் பதவி அளிக்கப்பட்டது குறித்து பலரும் இதை வாரிசு அரசியல் என விமர்சனம்  செய்துள்ளனர். 

இது குறித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ இது வாரிசு அரசியல் அல்ல எனத் தெரிவித்துள்ளார். மேலும் துரை வையாபுரிக்குக் கட்சியில் பொறுப்பு வழங்குவது குறித்து நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் அவருக்கு 104 வாக்குகள் ஆதரவாகக் கிடைத்ததால் அவரை தலைமை கழக செயலராக நியமிக்கப்பட்டுள்ளதாக வைகோ விளக்கம் அளித்துள்ளார்.