டிடெக்டிவ் நேசமணியாக வடிவேலு புதிய லுக்….!

Must read

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரியான திரைப்பட வாய்ப்புகள் அமையாவிட்டாலும், இன்றும் நம் மனதில் தோன்றி சிரிக்க வைப்பவர் வைகை புயல் வடிவேலு.

இதனிடையே நடிகர் வடிவேலு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க போவதாக தகவல் வெளியானது. இது குறித்த அப்டேட் எதுவும் அதன் பிறகு வரவில்லை. தெலுங்கில் பிரபலமாக இருக்கும் OTT தளம் ஆஹா. இந்நிறுவனம் விரைவில் தமிழகத்தில் பிரான்ச் ஓபன் செய்ய உள்ளது.

வடிவேலுவிடம் தங்கள் OTTக்காக காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க கோரி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது ஆஹா நிறுவனம். இறுதியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் வடிவேலு சம்மதம் தெரிவித்து சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வடிவேலுவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறது . அது சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படம் என கூறிவந்தனர். தற்போது இதனை சி.வி.குமார் மறுத்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சி.வி.குமார், ”Fake news uhh இருந்தாலும் ஓரு நியாயம் வேண்டாமாப்பா … ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா” எனக் குறிப்பிட்டுள்ளார். டிடெக்டிவ் நேசமணி எனக் குறிப்பிடப்பட்டு, உருவாக்கப்பட்டிருந்த வடிவேலுவின் தோற்றம், அவருக்கு பிடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

More articles

Latest article