விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங்கும், தோனி நடிக்கும் விளம்பர பட ஷூட்டிங்கும் நேற்று சென்னையில் அருகருகே நடந்ததுள்ளது.

நடிகர் விஜய்யை, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி சந்தித்திருக்கிறார்.

அப்போது இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் படங்களை விஜய் / தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பார்த்தும், பகிர்ந்தும் வருகின்றனர்.