டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும்  80% மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை ஏற்படாது என  டாக்டர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாதொற்றின் 2வது அலை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும் தொற்றிலும் இருந்து முழுமையாக பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசியே சிறந்த தீர்வாக காணப்படுகிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் தொற்று பாதிப்பில் இருந்து எளிதாக தப்பித்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு, தடுப்பூசி செலத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,   செய்தியாளர்களிடம் விளக்கமளித்த நிதி ஆயோக்கின் சுகாதாரப்பிரிவு தலைவர் டாக்டர் வி.கே.பால், பல சுகாதாரத்துறை ஊழியர்களிடம் தடுப்பூசி போட்டு பரிசோதித்ததில் அவர்களில் 80 சதவீதம் பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

லுமேலும்,தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஐசியு எனும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய நிலை 6 சதவீதம் பேருக்கு மட்டும் இருந்ததாகவும், தடுப்பூசியால் பாதுகாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 சதவீதமாக இருந்தததாகவும்  தெரிவித்துள்ளார்.