டேராடூன்: உத்தராகண்ட் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் எராளமானோர் சிக்கிய நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வெள்ளப்பாதிப்புகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆய்வு செய்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்த மேகவெடிப்பு  மழையால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆறு ஏரிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால்,   பல இடங்களை  வெள்ளம் சூழ்ந்தது. பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டதுடன் மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது.  மழை வெள்ள பாதிப்பு ரூ.7,000 கோடி என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, உத்தரகண்டில் மழை மற்றும் நிலச்சரிவு  ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். முதல்வர் புஷ்கர்சிங் தாமி, ஆளுநர் குர்மித் சிங், மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் ஆகியோர் உடன் சென்றனர். பின்னர், முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். நிவாரணப் பணிகளுக்கு தேவை யான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்த அமித் ஷா, நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளு மாறு அறிவுறுத்தினார்.

நிலச்சரிவில் சிக்கி ஏற்கெனவே 48 பேர் உயிரிழந்த நிலையில், நேங்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கி 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் 5 பேரைக் காணவில்லை என்றும் மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.-