டெல்லி: பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது முதல்முதலாக அமெரிக்க துணைஅதிபர் கமலா ஹாரிஸ்-ஐ சந்தித்து பேசுகிறார். வரும் 23ந்தேதி இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிகிறது.

வாஷிங்டனில் செப்டம்பர் 24ம் தேதி நடைபெற உள்ள ‘குவாட்’ (Quad) அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) மெரிக்காவுக்கு செல்கிறார். 
நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை (Quadrilateral Security Dialogue – Quad) என்பது அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆத்திரேலியா ஆகிய நான்கு நாடுகளுக்கு இடையிலான முறைசாரா மூலோபாய மன்றம் ஆகும். இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ‘குவாட்’ அமைப்பை உருவாக்கியுள்ளன.
இந்த அமைப்பின் கூட்டம் 24ந்தேதி நடைபெறுகிறது. அதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 22 அன்று வாஷிங்டன் டிசிக்கு வருகை தருகிறார். மறுநாள் காலையில் அவர் அமெரிக்க உயர் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்கிறார். தொடர்ந்து,  செப்டம்பர் 24ந்தேதி நடைபெறும் குவாட் கூட்டத்திலும், பின்னர், வெள்ளை மாளிகையில் நடைபெறும் இந்தியா அமெரிக்கா இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறார். அப்போது  அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் என வெள்ளி மாளிகை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக செப்டம்பர் 23ந்தேதி  அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் மற்றும் ஆப்பிள் தலைவர் டிம் குக் ஆகியோரை சந்திப்பார் என்று மோடியின் பயணத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து,  பிரதமர் மோடி அதே நாளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹிட் சுகாவையும் சந்திப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அதுபோல, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் வாஷிங்டன் வருகையும் பிரதமர் மோடியின் வாஷிங்டன் வருகையுடன் ஒத்துப்போவதால், , அவர்களும் சந்திப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
உலகம் முழுவதும் கோவிட் -19 தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து பிரதமர் மோடி மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இது ஆகு