தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய பிரதேசத்தில் வேட்புமனுத்தாக்கல்…

Must read

போபால்:  தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்காக அவர் இன்று  வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தோல்வியடைந்த நிலையில், அவருக்கு மத்திய சபை விரிவாக்கத்தின்போது, இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை மந்திரியாக இருந்து வருகிறார். இவர் 6 மாதத்திற்குள் எம்.பி.யாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதையடுத்து, அவரை மத்தியபிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்க பாஜக தலைமை தீர்மானித்தது.

தமிழ்கத்தில் இரண்டு இடங்கள் காலியாக இருந்தாலும், அவை திமுகவுக்கே கிடைக்கும் என்பதால், எல்.முருகன் ம.பி.யில் போட்டியிடுகிறார். அதையடுத்து, இன்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்  உடன் சென்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

More articles

Latest article