நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

Must read

சென்னை: நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நிலம் இல்லாத ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு நிலம் வழங்கும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு மத்திய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தது. இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து நிலம் வழங்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதையடுத்து,  நிலம் இல்லாத, ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதள்கடி, தமிழ்நாட்டில் நிலம் இல்லாத விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் “பிரதம மந்திரி” திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இந்தக் குழுவின் துணைத் தலைவராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் இருப்பார் என்றும், உறுப்பினராக நில நிர்வாக ஆணையரும், உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் இருப்பார் என்றும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குழு மூலமாக இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நிலம் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது

More articles

Latest article