முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

Must read

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டின்போது பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் நீதிமன்ற அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் என மொத்தம் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 16ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, அவரது வீட்டில் ,இருந்து சுமார் 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி , 34 லட்சம் ரூபாய் பணம், 1 லட்சத்து 80 ஆயிரம் அன்னிய செலாவணி, 2 ஹார்டுடிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியது.

இதையடுத்து,கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்  நகைகள் மற்றும் பணம் உள்பட அனைத்தையும் வேலூர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினர் ஒப்படைத்தனர்.

More articles

Latest article