ஈராக் மீது போர் தொடுக்க வாஷிங் பவுடரை காட்டிய அமெரிக்கா இப்போது கொரோனா வைரஸை காட்டுகிறது : சீனா குற்றச்சாட்டு

Must read

 

சீனாவை உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்த தைவான், ஹாங்காங் மற்றும் ஸின்ஜியாங் மாகாண முஸ்லீம்கள் என்று எங்கள் நாட்டு உள்நாட்டு பிரச்சனையை ஜி-7 நாடுகளின் மாநாட்டில் அமெரிக்கா பேசிவருகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ சீனா தான் காரணம் என்று டிரம்ப் கூறியிருந்தார், அதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி ஜனவரி 2021 லியே இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று கூறி இருந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கும் ஜோ பைடன் சீனா மீது மீண்டும் களங்கம் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதேவேளையில் சீனா 730 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்று டிரம்ப் மீண்டும் குரல்கொடுத்து வருகிறார்.

அமெரிக்காவின் இந்த செயல், 2003 ம் ஆண்டு ஈராக் மீது போர்தொடுப்பதற்காக ஈராக் உலகநாடுகளை அச்சுறுத்த பேரழிவு ஆயுதத்தை தயாரித்து வருவதாக குற்றம் சாட்டியது.

Image Courtesy : GlobalTimes China

இதற்கு ஆதாரம் கேட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், ஒரு குடுவையில் பவுடரை ஒன்றை கொடுத்து இதுதான் அந்த பேரழிவு ஆயுதம் தயாரிப்பதற்கான ஆதாரம் என்று கொடுத்தது, பின்னர் அந்த குடுவையில் இருந்தது துணி துவைக்க உதவும் சலவை சோப் தூள் என்பது தெரியவந்தது.

அதேபோல், தற்போது எங்கள் மீது கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி உலகநாடுகளை திசை திருப்பி வருகிறது என்று அமெரிக்கா மீது சீன ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளது.

More articles

Latest article