டெல்லி: மொஹல்லா கிளினீக் விவகாரத்தில் தாம் ஆம் ஆத்மியால் தவறாக வழி நடத்தப்பட்டதாக அமெரிக்க கல்வியாளர் விவேக் வாத்வா குற்றம்சாட்டி உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மொஹல்லா கிளினிக்குகளின் வெற்றியைப் பாராட்டி 2016ம் ஆண்டில் அமெரிக்காவை மையாக கொண்ட வாஷிங்டன் போஸ்டில் வாத்வா ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த கட்டுரை பற்றிய சில விவரங்களை அவர் இப்போது வெளியிட்டு இருக்கிறார்.

டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது: சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தன்னை தவறாக வழிநடத்தினார். அதனால் பொய் சொல்ல நேர்ந்தது. 2017ம் ஆண்டு மொஹல்லா கிளினிக்குகளில் நடைபெற்ற மோசடிகள் குறித்தும் அவர் கூறியிருக்கிறார்.

கிளினிக்குகளில் நிமிடத்திற்கு 2 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக சொல்லப்பட்டது. மருத்துவர்கள் நோயாளிகள் பற்றி தவறான உள்ளீடுகளை பதிவு செய்கின்றனர்.

தேவையில்லாத, பயன்படாத மருந்துகளை பரிந்துரைப்பதன் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளை ஏமாற்றுகிறார்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது தனது கட்டுரையை அரசியல் லாபங்களுக்காக பயன் படுத்தியதற்காக ஆம் ஆத்மி கட்சி மீது வாத்வா குற்றம்சாட்டி உள்ளார். நான் அரசியல் குறித்து, குறிப்பாக இந்தியர்கள் பற்றி கருத்து தெரிவிப்பது அரிது. ஆனால் இப்போது வேறு வழியில்லை என்றார்.