டெல்லி:

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு குறித்த பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கூறிய கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பிரபல ஆங்கில பத்திரிகையான டெலிகிராப் வெளியிட்டு உள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  நேற்றைய கூட்டத்தில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சியினரை கடுமையாக தாக்கி பேசிய நிலையில், நாட்டின் முதல் பிரதமரான நேரு குறித்தும் கடுமையாக விமர்சித்தார்,

அப்போது, நேருவை பெரிய அறிவாளினு சொல்றாங்க. மத சார்பு இல்லாதவர்னு சொல்றாங்க. தீர்க்கதரிசினு சொல்றாங்க. இன்னும் என்னென்னமோ சொல்றாங்க… அப்படிப்பட்டவரா இருந்தார்னா, 1950 ல போட்ட லியாகத் – நேரு ஒப்பந்தத்துல என்ன செஞ்சார்னு பாருங்க. அனைத்து மக்களும்னு சொல்றதுக்கு பதிலா, அனைத்து சிறுபான்மையினரும்.. அப்டீனுதான் சொல்லிருக்கார். (முஸ்லிம்கள் இங்க வரக்கூடாதுனு நேரு நினைச்சார்னுதான அர்த்தம்?) இதுக்கு வேற என்ன அர்த்தம்னு காங்கிரஸ்காரங்க சொல்லட்டுமே என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடியின் கருத்து பொய்யானது என்று காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பிரபல பத்திரிகையான டெலிகிராப் மோடி கூறுவது பொய் என்று விவரித்துள்ளது. அதற்கான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து உள்ளது.

பிரதமர் மோடி பொய் சொல்கிறார் என்றும், பாதி  தகவல்களை தெரிந்துகொண்டு பேசுகிறார் என்று தெரிவிருப்பதுடன்,  நேரு – லியாகத் ஒப்பந்தத்துல முதல் வாக்கியமே *எந்த மதமாக இருந்தாலும் சரி, அனைத்து சிறுபான்மையினரும்..*னுதான் (All minorities, irrespective of religion) ஆரபிக்குது என்று விவரித்து உள்ளது.

பிரதமர் மோடி இப்படி எத்தன பொய் சொன்னாலும் மறைந்த நேருவை   சிறுமைப்படுத்த முடியாது. ஏன்னா, அவர் நெசமாவே பெரிய மனுசன் என்று தெரிவித்து உள்ளது.

நன்றி : தி டெலிகிராப் நாளிதழ் 07.02.2020