உரி தாக்குதல்: பலியான ராணுவவீரர்களுக்கு அரசு, பொதுமக்கள் இறுதி அஞ்சலி!

Must read

 
உரி:
காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்களின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பேர் கண்ணீர் மல்க கலந்துகொண்டனர்.
உரி தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் இறுதி ஊர்வலம் நிகழ்ச்சி அந்தந்த மாநிலங்களில் நடைபெற்றது.  பொதுமக்கள், மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். அவர்களின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் ராணுவ வீரர் சந்தீப் சோம்நாத்திற்கு சிறப்பான இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.  அதேபோல், சந்திரகாந்த் ஷங்கர் காலந்தே(சதாரா), விகாஸ் ஜனார்தன் குல்மேதே(யாவட்மால்), விகாச் ஜன்ராவ்(அமராவதி) ஆகியோருக்கும் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
உரியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த  ராணுவ வீரர் கங்காதர டாலிக்கு அவரது சொந்த ஊரான மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் ராணுவ மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் மூலம் வீர வணக்கங்களை  ராணுவ வீரர்கள் செலுத்தினர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த மூன்று ராணுவ வீரர்களின் இறுதி ஊர்வலத்தில் மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலததை சேர்ந்த என்.எஸ்.ராவத்தின் உடல் ராணுவ மரியாதையுடன் அவரது கிராமமான ராஜ்சம்ந்த் மாவட்டத்தில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது
ராணுவ வீரர்களின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியில் அவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்ணீர் மல்க  அஞ்சலி செலுத்தினர்.

More articles

Latest article