பெங்களூரு:
காவிரி பிரச்சினை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும் கர்நாடக முதல்வர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
காவிரி பிரச்சனை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
sonia
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசை,  காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்காதது ஏன்? இத்தனை காலம் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்று தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
அதோடு, காவிரி விவகாரத்தில் மேற்பர்வை குழுவை தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்கள் எதிர்ப்பதால் மேலாண்மை வாரியமே முடிவு என்றும் தங்களது கருத்தை தெரிவித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளனர்.
அதோடு புதன்கிழமை  முதல் செப்டம்பர் 27ம் தேதி வரை,  கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை  திறந்து விட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம்  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து கர்நாடகாவில் மீண்டும் போராட்டம் ஆரம்பித்துள்ளது. இதுகுறித்தும், அரசியல் நெருக்கடி குறித்தும்   கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் முதல்வர்  சித்தராமையா,  காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது,  கர்நாடகாவுக்கு 70% தண்ணீர்  பற்றாக்குறை இருப்பதாகவும், அதன் காரணமாக காவிரியில் நீர் திறக்க முடியாது என தெரிவித்ததாகவும், மேலும் கர்நாடக அரசு எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சோனியாகாந்தி, இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த சித்தராமையா வுக்கு சோனியா அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.  காவிரி விவகாரம் தொடர்பாக சித்தராமையா அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக இன்று அனைத்து கட்சி தலைவர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்திவிட்டு, சட்டசபையையும் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க சித்தராமையா தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சோனியாவுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.