சிசுமந்திர்:
டிசாவில் ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
ஒடிசாவில் தென்கானல் மாவட்டத்தில் உள்ள சிசு மந்திர் என்ற இடத்தின் அருகே 45 பயணிகளுடன் தனியார் பேருந்து  சென்று கொண்டிருந்தது.  அப்போது ரோட்டின் குறுக்கே சென்ற  உயர் மின் அழுத்த கம்பி மீது பேருந்து உரசியது.
bus_37
அந்த உயர்அழுத்த மின் கம்பியில் 11 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் சென்று கொண்டிருந்தது.  அந்த உயர் அழுத்த மின் கம்பியில் பஸ் உரசியதால், பஸ்சினுள் மின்சாரம் பாய்ந்தது.
இந்த எதிர்பாராத சம்பவத்தால் பஸ்சினுள் இருந்த பயணிகளில்  6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .  மேலும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் கரண்டு ஷாக்கால் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் , இறந்த பயணிகளுக்கு  2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும்  ஒடிசா மின்வாரியம் சார்பாக 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி அம்மாநில மின்துறை அமைச்சர் பிரணாப் பிரகாஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.