ஸ்மார்ட் சிட்டி: மத்திய அரசு பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு!

Must read

 
 
1a-smart
டில்லி:
ஸ்மார்ட் சிட்டியின் 3வது பட்டியலில் தமிழகத்தின் தஞ்சை, மதுரை, சேலம், வேலூர் நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று , நாடு முழுவதும் ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது . நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகள் அமைப்பதில் முதல் கட்டமாக டில்லி மற்றும் மும்பை இடையில் 7 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்க உள்ளனர் .
நாடு முழுவதுமிருந்து  ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் உலகத்தரத்திற்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.  இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஏற்கனவே இரண்டு கட்டமாக நாடு முழுவதுமிருந்து 33 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் 3-வது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலை நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையா நாயுடு இன்று வெளியிட்டார்.இந்த பட்டியல் குறித்து மந்திரி வெங்கையா நாயுடு கூறுகையில் “3-வது ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு இந்தியா முழுவதுமிருந்து 63 நகரங்கள் போட்டியிட்டதில் 27 நகரங்கள் தேர்வாகியுள்ளன.
தமிழகத்திலிருந்து வேலூர், மதுரை, சேலம், தஞ்சாவூர் ஆகிய நான்கு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 27 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரூ.66,833 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது“ என்றார்.
தானே, நாசிக், நாக்பூர், அவுரங்காபாத், ஆக்ரா, அஜ்மீர், அமிர்தசரஸ், மங்களூர், வதோதரா, வாரணாசி, திருப்பதி, மங்களூர், அமிர்தசரஸ் நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன.
இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் மின்சார கிரிட்களில் இருந்து சாக்கடை செல்லும் பைப்புகள் வரை அனைத்தும் ஒரு நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருக்கும் . கேமராக்கள் , வயர்லெஸ் கருவிகள் , தகவல் மையங்கள் என ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும் .  இதன் மூலம் நீங்கள் ஒரு விளக்கை அணைக்க மறந்துவிட்டாலும் உங்களின் கட்டிடம் உங்களுக்கு அந்த வேலையை செய்து முடிக்கும் . உங்கள் கார்கள் உங்களுக்கு டிராபிக் இல்லாத இடமாக பார்த்து பார்க் செய்திட உதவும் .

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article