புதுடெல்லி:

மேகதாது அணைக்கு கர்நாடக அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றித் தர மனு கொடுத்தேன்.

நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டுகோள் விடுத்தேன். தமிழகத்துக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவும், தமிழக திட்டங்களுக்கு அனுமதி தரவும் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேகதாது அணைக்கு கர்நாடக அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தினேன். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்தவும் கோரிக்கை விடுத்தேன் என்றார்.