நீதிமன்ற விசாரணையை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு?

Must read

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த விசாரணையை தொடர்ந்து நகர்ப்புற ள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில், பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து வந்த உள்ளாட்சி தேர்தல், தமிழகத்தில், கடந்த 2019ம் ஆண்டு மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், நகர்ப்புறங்களுக்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றமும்,  ஜனவரி 31ம் தேதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. தேர்தல் விரைவில் அறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், தேர்தல் தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழக்கு இன்று நீதிமன்றத்தில் வருகிறது. இன்று தேர்தல் தொடர்பான வழக்கு நேரடி விசாரணயாக நடைபெற உள்ளது. விசாரணையைத் தொடர்ந்து, நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய கோரிய வழக்கு: 24ந்தேதிக்கு ஒத்தி வைப்பு…

More articles

Latest article