80 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த சேலம் வாலிபர்கள்மீது குண்டாஸ் பாய்ந்தது…

Must read

சேலம்:  சேலம் அருகே தோட்டத்தில்  இருந்த 80 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட சேலம்  வாலிபர்கள் 2 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த  80 வயது மூதாட்டியை அந்த பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 2 வாலிபர்கள் மூதாட்டியை கீழே தள்ளி மாறி, மாறி பாலியல் வன்புணர்வு செய்தனர். இந்த சம்பவம்  கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி நடைபெற்றது.

இதுகுறித்த புகாரின் பேரில், சுமார் 19 மற்றும் 20 வயதுடைய இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள்மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.  போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் பரிந்துரையை ஏற்று, சேலம் கலெக்டர் கார்மேகம், வாலிபர்களான  சீனிவாசன், விக்னேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து சேலம் மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

More articles

Latest article