தஞ்சாவூர்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பள்ளியில் மதமாற்ற வற்புறுத்தலால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மாணவியின் சித்தி மற்றும் தந்தை தஞ்வை  மாவட்ட நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர்.

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவரது மகள் லாவண்யா, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிறிஸ்தவ பள்ளியில் 12ம் வகுப்பு  படித்து வருகிறார். அங்குள்ள  பள்ளி விடுதியில் தங்கியிருந்த அவர் கடந்த 9ம் தேதி பூச்சிமருந்தை குடித்துள்ளார். விடுதி நிர்வாகம் முருகானந் தத்திற்கு தகவல் தெரிவித்து அவர் வந்து தனது மகளை ஊருக்கு அழைத்து சென்றார். பின்னர் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15ம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவி தான் பூச்சிமருந்தை குடித்ததையும், விடுதியில் தன்னை  மதமாற்றம் செய்ய கூறி வலியுறுத்தி வந்ததாகவுங்ம, இதை மறுத்ததால், தனக்கு அதிகப்படியான  வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாக வார்டன் மீது குற்றம் மந்தி இருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலானது. இதற்கிடையில் கடந்த 19ம் தேதி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விடுதி வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் பூதாகாரமானதைத் தொடர்ந்து,  மாணவி தற்கொலைக்கு காரணம் பள்ளி நிர்வாகம்தான் என கூறி பாஜகவினரும், மாணவியின் பெற்றோரும் தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து  போராட்டம் நடைபெற்றது.

கிறிஸ்தவ மதத்துக்கு மாற தனியார் பள்ளி வார்டன் வற்புறுத்தியதால் பிளஸ்2 மாணவி தற்கொலை! வீடியோ…

ஆனால்,  மாணவி மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் என்னை விடுதி வார்டன் பில்களை கணக்கு எழுத வேண்டும் என்று மீண்டும் டார்ச்சர் செய்தார். விடுமுறைகளுக்கு வீட்டிற்கு அனுப்பமாட்டார். என்னை திட்டிக்கொண்டே இருப்பார். இதனால் தான் நான் மருந்து சாப்பிட்டு விட்டேன். அவர் மீது நடவடிக்கை எடுக்கணும். வேறு ஏதுமில்லை என்று கூறியதாகவும் தகவல் பரவின.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை விசாரணை நடத்தி,  மாணவி உடலை பெற்றோர்  பெற்றுக்கொண்டு அடக்கம் செய்யவேண்டும் என்றும்,  மாணவியின் தந்தை, தாய் தஞ்சை நீதித்துறை நடுவர் முன்  ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து இறந்த மாணவியின் பெற்றோர் நேற்று  காலை 11.55 மணியளவில் தஞ்சை 3வது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் பாரதி முன்பாக மாணவியின் பெற்றோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். மதியம் 2.30 மணிவரை பெற்றோரிடம் தனித்தனியாக நீதிபதி வாக்குமூலம் பெற்றார். இந்த வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஐகோர்ட் மதுரை கிளையில் ஒப்படைக்கப்படும் என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கிறித்துவ பள்ளியில் மதம் மாற அழுத்தம் அளிக்கவில்லை : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி