சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து, மாநில சுகாதாரத்துறை செயளாலர் உள்பட அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்தலின்போதுஎடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, பாதுகாப்பு உள்பட பல்வேறு பணிகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பிப்ரவரி 18ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டு 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது. வேட்புமனுத்தாக்கல் ஏற்கனவே தொடங்கிய நிலையில், நாளையுடன் (4ந்தேதி) முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும், தேர்தல் கண்காணிப்பாளர்களுடன்   வேட்பு மனுக்கள் பரிசீலனை, பதற்றமான வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு, கண்காணிப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.  அதில்,  பதற்றமான  வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிசிடிவி பொருத்துதல், தேர்தல் கண்காணிப்பு, கொரோனா பரவல் கட்டுப்பாடு ஆகியவவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வாக்கு இயந்த்திரங்களில் சின்னங்கள் பொருத்துவது, நாளைமுறையின் வேட்பு மனு பரிசீலனை உள்ளிட்ட பணிகளை திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனையில் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வெப்பமானி, கை சுத்திகரிப்பான், முகக்கவசம், கை உறைகள், பிபிஇ கிட்ஸ், டி-கட் பேக்ஸ், வாக்காளர்களுக்கான கையுறைகள் போன்றவற்றை தேவையான அளவு வைத்திருப்பது. சமூக இடைவெளியை கடைபிடிப்பது. வாக்காளர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை எடுத்துரைப்பது, வாக்குசாவடிகளில் கொரோனா அறிகுறி தென்படும் நபர்களை உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்வது மற்றும் இதுவரையில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆனையம் வெளியிட்டுள்ள கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்திட ஏற்கனவே கூடுதல் அறிவுரைகளை வழங்கியுள்ளது. இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கொரோனா தடுப்பு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை வழங்கினார்.