சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பிரசாரத்திற்கான நேரம் இரவு 10 மணி வரை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால், மாநில தேர்தல் ஆணையம் மேலும் தளர்வுகளை வழங்கி உள்ளது. அதன்படி, காலை 6 முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதல் நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம் என்றும், வழிகாட்டுதல்களை நெறிமுறைகளை பின்பற்றி இரவு 10 மணி வரை, பிரசாரம்  செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.