டில்லி

ற்கனவே திட்டமிட்டபடி யு பி எஸ் சி முதன்மை தேர்வுகள் இன்று தொடங்குகிறது.

நாடெங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது.   இந்த வருடத்துக்கான முதன்மை தேர்வுகள் இன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.    தற்போது கொரோனா பரவல் காரணமாகப் பல மாநிலங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இந்த தேர்வு நடக்குமா எனச் சந்தேகம் எழுந்தது.

நேற்று முன் தினம் யுபிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் இன்று முதல் தேர்வுகள் தொடங்கும் என உறுதி செய்யப்பட்டது.  இந்த தேர்வுகளை எழுதுவோருக்கும் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளுக்கும் எவ்வித தடங்கலும் ஏற்படாமல் மாநில அரசுகள் கவனித்துக் கொள்ள வேண்டும் என யுபிஎஸ்சி அறிவுறுத்தியது.  அதன்படி இன்று முதல் தேர்வுகள் தொடங்குகின்றன.

இந்த தேர்வர்களுக்கான எலக்டிரானிக் அனுமதிச் சீட்டு, தேர்வு அலுவலர்களின் அனுமதிச் சீட்டு ஆகியவற்றை போக்குவரத்துக்கு அனுமதியாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என யுபிஎஸ்சி  கேட்டு கொண்டுள்ளது.  அதன்படி தமிழகத்தில் நேற்று முழுவதும் கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள போதிலும் தேர்வர்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.