காவல் துறை இணையதளங்களில் எப்.ஐ.ஆர் பிரதி தரக் கோரி வழக்கு

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

24 மணி நேரத்திற்குள்  காவல் துறை இணையதளங்களில் எப்..ஆர் பதிவேற்ற பொதுநல வழக்கு; மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. 
FIR FEATURED 1
பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் போலீஸ் வலைத்தளங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவேற்றப்பட வேண்டுமென்று போடப்பட்ட பொதுநல வழக்கின் நோட்டீஸை இந்திய உச்ச நீதிமன்றம்  மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும்  வெளியிட்டுள்ளது. இந்த பொதுநல வழக்கு இளைஞர் பார் அசோசியேஷனால் தாக்கல் செய்யப்பட்டது.
FIR 1
எப்.ஐ.ஆர் ஒரு பொது ஆவணம் என்று மனுதாரர் கூறினார்;எனினும், போலீஸாரிடமிருந்து எப்.ஐ.ஆர் நகலைப் பெறுவது பொது மக்களுக்கு ஒரு எளிதான பணி அல்ல. எனவே, முதல் தகவல் அறிக்கை வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டால் அது பொது மக்களுக்கு பெரிய உதவியாகவும் அவர்கள் எதிர்கொள்ளும் பல சிரமங்களை தவிர்க்கவும் முடியும்.
FIR 2
நவம்பர் 2015 இல், “பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாக்கவும், தக்க விசாரணை நடத்தவும், சாட்சிகளின் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு போன்ற இதர முக்கிய அம்சங்களுக்காக வலைத்தளத்தில் எப்.ஐ.ஆர் பதிவேற்றப்படாமல் இருப்பதே பாதுகாப்பு” என்ற விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் உ.பி. போலீஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டுமென மாநில அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.
FIR 3
மேலும் 26.01.2015 முதல் முதல் தகவல் அறிக்கை [எப்.ஐ.ஆர்] தாக்கல் செய்த 24 மணி நேரத்திற்குள் போலீஸார் வலைத்தளத்தில் அதன் நகலை பதிவேற்ற வேண்டுமென இமாசலப் பிரதேச உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. முன்னதாக 2010 ல், தில்லி உயர் நீதிமன்றம் இதேப்போல் ஒரு ஆணை விடுத்திருந்தது. அதாவது குற்றம் சாட்டப்பட்டவரிடமோ அல்லது அவருக்கு சம்பந்தமானவரிடமோ எப்.ஐ.ஆர். கேட்டு விண்ணப்பத்த 24 மணி நேரத்திற்குள் அதன் நகலை அளிக்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அறிவுரைத்தார்.
FIR 4

More articles

Latest article