இந்தியாவில் சுத்தமான காற்றை குடுவையில் விற்க கனடிய நிறுவனம் திட்டம்

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

PURE AIR FOR SALE 1
சுத்தமான காற்றினுடைய மதிப்பு என்ன? உலக சுகாதார மையம் (WHO) வெளியிட்ட இந்தியாவிலேயே மிக துர்நாற்றமான அசுத்தமான காற்றை சுவாசிக்கும் நகரங்களின் பட்டியலில் முத இடத்தை வகிக்கும் புது தில்லி மக்களுக்கு இது விலைமதிப்பற்றதாக தோன்றலாம். ஆனால் ஒரு கனடிய நிறுவனம் இதற்கான விலை, மூச்சு ஒன்றுக்கு சுமார் ரூ.12.50 என்று நினைக்கிறார்கள்.
ஆல்பர்ட்டாவின் மேற்கு மாகாணமானத்தில் உள்ள எட்மன்டனைச் சார்ந்த வைடாலிடி ஏர் என்ற புதிய நிறுவனம், இந்த மே மாதம் முதல் கனடிய ராக்கியிடமிருந்து இந்திய நுகர்வோர்களுக்கு குடுவையில் அடைக்கப்பட்ட  இயற்கை காற்றை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. புது தில்லிக்கு இணையாக பெய்ஜிங் மற்றும் மற்ற பெரிய நகரங்களில் பனிப்புகையின் அளவு அதிகமாகவுள்ளதால், 2015 இல் இந்த நிறுவனம் சீனாவில் அதன் தயாரிப்பை தொடங்கிய போது கனடாவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து பிரபடமடைந்தது.
VITALITY 4
வைடாலிடி ஏர் நிறுவனர் மோசேஸ் லாம், “இது கடந்த ஆண்டு கோடை காலத்தில் ஒரு புதுமையான திட்டமாக தொடங்கியது. கால்கரியில் காட்டு தீ ஏற்பட்டு இருந்தது அதனால் அனைத்து மக்களும் புகையின் காரணமாக எங்கள் தயாரிப்பை பயன்படுத்த தொடங்கினர் ” என்று கூறினார்.
Vitality-Air-696x449
ஆரம்பத்தில் இவர் பாட்டில்களில் மினரல் தண்ணீர் விற்பனை செய்தார். இதற்கிடையில், சீன மக்கள் ஆன்லைனில் கானிஸ்டர்கள் வாங்கத் தொடங்கினர். அப்போது தான் பலர் புகைக்கு சாத்தியமானது மூடுபனிக்கு சாத்தியமாகலாம் என்று கூறினர். சீனாவில் ஒரு விநியோகஸ்தரை கண்டுபிடித்த லாம் இப்போது பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட ஏழு நகரங்களுக்கு சுமார் 12,000 குடுவைகளை அனுப்பியுள்ளார்.
VITALITY AIR 12
 
இந்த தயாரிப்பில், அழுத்தப்பட்ட காற்று உள்ளது, அது ஒரு முகமூடி மூலம் சுவாசிக்கப்படுகிறது, மேலும் அது இரண்டு வகைகளில் வருகிறது – பான்ஃப் மற்றும் லேக் லூயிஸ் என்பனவாகும். பான்ஃப் என்பது ஆல்பர்ட்டாவில் உள்ள ஒரு தேசிய பூங்கா மற்றும் ஒரு பிரபலமான ரிசார்ட் ஆகும். “அது எட்மன்டன் பக்கத்தில் உள்ளது, புதிய காற்றைச் சித்தரிக்கும் கனடாவின் ஒரு இயற்கை புதையல் அது,” என்று லாம் என்றார்.
 
அந்த காற்று 3-லிட்டர் மற்றும் 8-லிட்டர் கேன்களில் கிடைக்கும், இரட்டை கட்டுகளின் விலை ரூ .1,450 முதல் ரூ .2,800 வரை ஆகும். அவர்கள் காற்றை எப்படி சேகரிக்கிறார்கள் என்பது ஒரு “வர்த்தக இரகசியம்” ஆகும், ஆனால் அது ஒரு “மாபெரும் வெக்குவம்” செயல்முறை. “நாங்கள் பான்ஃபின் அனைத்து காற்றையும் அதாவது சுமார் 150,000 லிட்டர் காற்று ஒவ்வொரு முறையும் எடுக்கிறோம், இதற்கு 40 மணி நேரம் தேவைப்படுகிறது,” என்றார் லாம்.
VITALITY AIR 3
இந்தியர்களுக்கு சுத்தமான, மிருதுவான கனடிய காற்று தேவைப்படும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். “சீனாவை விட இந்தியாவில் மாசு அதிகம், அதனால் நாங்கள் இந்தியாவை எங்கள் பெரிய சந்தையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.”
கர்ப்பிணி தாய்மார்கள், பெருநிறுவன நிர்வாகிகள், மற்றும் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்கள் கூட இதிலிருந்து பயன் பெறுவார்கள் என்று சீனாவில் கிடைத்த தங்களது அனுபவம் காட்டியதாக லாம் கூறினார்.   சேர்க்கப்படவில்லை என்று காட்டியது கூறினார். இப்போது, அவர்கள் இந்தியாவில் இது வெற்றியடையுமா என்று திகைப்புடன் காத்திருக்கிறார்கள்.
 
 
 

More articles

Latest article