லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கும்பமேளா வரும் ஜனவரி மாதம் தொடங்குகிறது.

ஜனவரி 14ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை என 49 நாட்கள் நடைபெறும் இந்த கும்ப மேளாவை நடத்த உத்தரபிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போதே தயாராகி வருகிறார். இதற்காக ரூ. 2 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். அனைத்து அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசித்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.

6 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் ஹரிதுவார், அலகாபாத், நாசிங், உஜ்ஜைன் ஆகிய நகரங்களில் கும்பமேளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த நகர ஆற்றங்கரைகளில் பக்தகர்கள் புனித நீராட உலகம் முழுவதும் இருந்து வருகை தருவார்கள். இந்த வகையில் அலகாபாத்தில் அடுத்த ஆண்டு தொடங்கும் இந்த கும்பமேளாவுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் 20 லட்சம் பேர் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அதோடு 10 லட்சம் வெளிநாட்டினருக்கு அழைப்பு அனுப்பப்படவுள்ளது. மத்திய வெளியுறவு துறை அமைச்சகமும் வெளிநாட்டு பக்தர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை நடத்த தயாராகி வருகுறது. இதற்கென அடுத்த மாதம் உத்தரபிரதேச அரசு பிரத்யே பெப்சைட்டை தொடங்கவுள்ளது.