அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில், சுமார் 46% நிலங்கள் இன்னும் பயன்படுத்தப்படாமலேயே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற நோக்கத்திற்காக அம்மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட நிலத்தின் அளவு 14197 ஹெக்டேர்கள். ஆனால் அவற்றில் 6500 ஹெக்டேர் நிலங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த நிலங்களை சோலார் மின் உற்பத்தி திட்டங்களுக்காகப் பயன்படுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நா‍டு முழுவதுமே சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் கிடக்கும் நிலங்களின் அளவு 23700 ஹெக்டேர்கள்.

ஒவ்வொரு சிறப்புப் பொருளாதார மண்டலத்திலுமே சோலார் ஆற்றல் உற்பத்திக்காக பயன்படும் வகையில் இடம் உள்ளது. அதேசமயம், சில சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட வளத்தினை சிறப்பான முறையில் பயன்படுத்துகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.