க்னோ

ரும் 2022 ஆம் வருடம் நடைபெற உள்ளா உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி வசிக்க வீடு தேடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலராக  பதவி ஏற்றுக் கொண்டுள்ள பிரியங்கா காந்தி வதேரா கடந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடும் பிரசாரம் செய்தார்.    அப்போது அந்த மாநிலத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது தெரிய வந்தது.     மோதிலால் நேரு காலத்தில் இருந்தே உத்தரப் பிரதேச மாநிலத்தில் அந்தக் குடும்பத்துக்கு ஆதரவு இருந்து வந்துள்ளது.

வரும் 2022 ஆம் வருடம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்ட்க்ஹல் நடைபெற உள்ளது.    தற்போது ஆட்சி செய்து வரும் பாஜகவை நீக்கி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் மிகவும் முயற்சி செய்து வருகிறது.    இந்த தேர்தல் பிரசாரத்துக்கு அக்கட்சி பிரியங்கா காந்தியின் பிரச்சாரத்தை மிகவும் நம்பி உள்ளது.    இதையொட்டி லக்னோ நகரில் பிரியங்கா காந்தி தங்க வீடு தேடும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியினர் இறங்கினார்கள்.

பல வீடுகளைப் பார்த்த அவர்கள் தற்போது இரு வீடுகளை இறுதிப் பட்டியலில் வைத்துள்ளனர்.   அந்த வீடுகள் லக்னோ நகரில் கோகலே மார்க் மற்றும் கோமதி நகர்ப் பகுதிகளில் உள்ளன.  இந்த இரு வீடுகளையும் காந்தி ஜெயந்தி விழாவில் கலந்துக் கொள்ள லக்னோ வந்த பிரியங்கா காந்தி பார்த்துள்ளார்.   இன்னும் எந்த வீடு முடிவு செய்யப்படும் என்பது சரிவரத் தெரியாத நிலை உள்ளது.

காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தபடி இவற்றில் ஒரு  வீடு இந்திரா காந்தியின் தாய் வழி உறவினரா ஷீலா கவுலுக்குச் சொந்தமானவை என கூறப்படுகிறது.   தற்போது இந்த வீட்டில் கவுல் குடும்பத்தினர் வசிக்கவில்லை.  இந்த வீடு  காங்கிரஸ் தலைமையகத்துக்கு 3 கிமீ தூரத்தில் உள்ளது.   பிரியங்காவுக்குச் சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு உள்ளதால் இந்த வீடு பாதுகாப்பு அம்சப்படி சரியாக உள்ளதா என்பது சோதனை செய்யப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.