சென்னை: சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இன்று செமஸ்டர் முடிவுகள் வெளியாகின்றன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான 2023-24ஆம் கல்வியாண்டு நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று (மார்ச் 29) வெளியாகிறது. இளநிலை மாணவர்கள் மறுகூட்டலுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 5-ந்தேதிக்குள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான 2023-24ம் கல்வியாண்டு நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.

பி.காம், முதுநிலை மாணவர்கள், https://egovernance.unom.ac.in/results என்ற இணையதளத்திலும், பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., சமஸ்கிருதம், உருது, அரபு மொழித் தேர்வு முடிவுகளை https://exam.unom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

முடிவுகள் வெளியான பிறகு, மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் 5-ந்தேதிக்குள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மறுமதிப்பீட்டிற்கு ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கான தொகையை, ‘பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் வரைவோலையாக செலுத்த வேண்டும்.

இளநிலை மாணவர்கள் மறுகூட்டலுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 5-ந்தேதிக்குள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.300 கட்டணத்தை ‘பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் வரைவோலையாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.