சென்னை: 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள், பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.

தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை, புதிய நீர்த்தேக்கம் அர்ப்பணிப்பு உள்படபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தொடங்கி வைக்க  2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்.  டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டவர் மதியம் 2 மணி அளவில் சென்னை  விமான நிலையத்தை வந்தடைந்தார் . விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் ஜெயக்குமார்,பெஞ்சமின், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதையடுத்து ஓட்டலுக்கு சென்ற அமித்ஷா, சாலையோரத்தில் பொதுமக்கள் கொடுத்த வரவேற்பையடுத்து,  கான்வாயை நிறுத்தி சாலையில் சிறிது தூரம் நடந்து சென்றார்.,

தொடர்ந்து, இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகச்சியில், தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம், உயர்மட்ட சாலை திட்டம்,சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளிட்ட ரூ.67,378 கோடியிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.மேலும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமை வகிக்கிறார் . துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். இதனைத்தொடர்ந்து அமித்ஷாவும் உரையாற்றவுள்ளார்.

இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் ,அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் மேற்கொள்ள உள்ளார்.எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என ஆலோசிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.