சென்னை: நீலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் ஜூன் 30 பதிவு செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. இந்த நிலையில், மத்தியஅரசின் அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என தமிழகஅரசின் நீர்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவு கணக்கிடப்பட்டு,அதற்கு கட்டணம் நிா்ணயம் செய்வதற்கு தண்ணீா் கொள்கை 2012 என்கிற புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் நிலத்தடி நீரை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவர்கள் கட்டயாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், உட்கட்டமைப்பு, இண்டஸ்டரியல், மொத்த தண்ணீர் சப்ளை ஏஜென்சிகள், குரூப் ஹவுசிங் சொசைடிகள், குடியிருப்பு அபார்ட்மென்ட்களுக்கான குடிநீர் மற்றும் வீட்டு பயன்பாட்டு உள்ளிட்ட எல்லா நிலத்தடி நீர் பயன்படுத்துவர்கள், தற்போது அல்லது புதிய நீலத்தடி நீர் பயன்பாட்டளர்கள் 30.6.2022 க்குள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் இருந்து நிலத்தடி நீர் எடுப்பதற்கான அனுமதி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்திருந்தது.
,,இது தமிழக மக்களிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ,நிலத்தடி நீருக்கு ரூ.10,000 கட்டணம் என்ற மத்திய நிலத்தடி நீர் ஆதாரவள ஆணையத்தின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.மேலும்,நிலத்தடி நீர் பாதுகாப்பு,நீர் எடுத்தல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.