சென்னை: நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சவாரியை தொங்கி வைத்து, அந்த, படகில் பயணமும் செய்த அமைச்சர் செல்லூர் ராஜு பின்னர்  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர், தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதேவேளை திமுக ஆட்சிக்கு வரக் கடுகு அளவு கூட வாய்ப்பில்லை என்றார்.

மேலும, கட்சி தொடங்கப்போவதில்லை என்ற ரஜினியின் முடிவு வரவேற்கத்தக்கது. தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஆழமாக சிந்தித்து ரஜினி நல்ல முடிவு எடுத்துள்ளார்.ரஜினி முடிவு எடுத்தது போன்று கமலும் முடிவு எடுக்க செல்லூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக இரண்டாக உடையும் என திமுக தலைவர் விமர்சனம் செய்து வருகிறாரே என்ற கேள்விக்கு, கட்சி செல்வாக்கைச் சீர்குலைக்க மு க ஸ்டாலின் நினைக்கிறார். அதிமுகவில் இருபெரும் தலைவர்கள் உருவெடுத்துள்ளார்கள் என முதல்வர் பழனிசாமியையும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் குறிப்பிட்டவர்,

பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் தொடர்பான கேள்விக்கு,  “அதிமுகவினர் பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்குவதாக வெளியாகும் தகவல்கள் கடுகு அளவு கூட உண்மை கிடையாது. அந்தந்த கடை ஊழியர்கள் மட்டுமே டோக்கன் வழங்கி வருகிறார்கள் என்று பதில் தெரிவித்தவர்,

நியாயவிலைக்கடை ஊழியர்களுக்குப் புதிதாகச் சீருடை வழங்கப்படவுள்ள நிலையில் சீருடை அணியாமல் யாரும் நியாயவிலைக்கடைகளில் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினார்.