சென்னை: அரசு மற்றும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து வரும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக்ததில்  கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிக் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு  மாணவர்களுக்கு  ஆன்லைன் வழியாக  பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பது பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களை பாதிக்கும் என்று பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பு வகுப்புக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.