யூனிசெஃப் அதிர்ச்சி தகவல்: உலகம் முழுவதும் அகதிகளாக 1.10 கோடி குழந்தைகள்!

Must read

ல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும்  1.10 கோடி குழந்தைகள் அகதிகளாக வாழ்வதாக ஒரு புள்ளி விபரத்தை யூனிசெஃப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
1uni
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்று அழைக்கப்படும் யூனிசெஃப் நிறுவனம், 1946-ஆம் ஆண்டு உலகமுழுவதுமுள்ள சிறுவர் சிறுமியரின் உணவு மற்றும் சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் ஐநா சபையால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் செய்த ஒரு கணக்கெடுப்பில் 2005 முதல் 2015 வரையிலான பத்து ஆண்டுகளில் அகதிகளாக வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பானதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது தவிர புலம் பெயர்ந்து சென்ற 2 கோடி குழந்தைகள், உள்நாட்டு கலவரங்களால் சொந்த நாட்டினுள்ளேயே சிதறடிக்கப்பட்ட 1.7 கோடிக்குழந்தைகள் என்று பட்டியல் நீளுகிறது. மேற்கண்ட பட்டியலில் உள்ள குழந்தைகளில் 2.8 கோடி குழந்தைகள் மோசமான வன்முறையை அனுபவித்து அதன் மூலம் வலுக்கட்டாயமாக துரத்தப்பட்டவர்கள்.
இத்தகவவலை தெரிவித்த யூனிசெஃப் நிறுவனம், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பதில் உலகநாடுகள் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும்  என்று கேட்டுக் கொண்டுள்ளது.

More articles

Latest article