மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது அலுவகலத்தை புதுப்பிக்க ரூ 1.16 கோடி செலவிட்டதும், அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் ஆகியோரும் இதே போல ஆடம்பர செலவு செய்ததும் இப்போது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இதில் அமைச்சர் நக்வி குப்பைத் தொட்டிகள் வாங்க மட்டும் ரூ.7000 செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
3 ministers
மத்திய அமைச்சர்களில் சிலர் தங்களது அலுவலகங்களை கிட்டத்தட்ட ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் அளவுக்கு ஆடம்பரமாக மாற்றிவருவதை பலர் கடுமையாக விமர்ச்சித்துள்ளனர். மிக எளிய பின்னனியிலிருந்து வந்த பிரதமர் மோடியின் அமைச்சர்களா இப்படி! என்று சில பத்திரிக்கைகள் விமர்ச்சித்துள்ளனர.  பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் அமைச்சர்கள் மொத்தமாக தங்கள் அலுவலகத்தை புதுப்பிக்க மட்டும் ரூ.3.5 கோடி செலவிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்களான உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,  நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்புதுறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் தங்கள் அலுவலகங்களை ஆடம்பரப்படுத்தாமல் இன்னும் எளிமையாக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
அலுவலக ஆடம்பரத்தில் கவனம் செலுத்தி, குடிமக்கள் காசை கரியாக்கி கண்டணங்களை அள்ளிக்கட்டிக் கொண்ட அனைவருமே அனுபவமற்ற புதிய அமைச்சர்கள்.
ரூ.7000-க்கு குப்பைத்தொட்டிகள் வாங்கி அதில் என்னதான் போடப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது அமைச்சர் அப்பாஸ் நக்வி, தாம் பதவியேற்றபோது தமது அலுவலகம் சிதிலமடைந்த நிலையில் இருந்தது மற்றபடி இந்த செலவு விபரங்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்தார்.