வீரேந்திர சேவாக்குக்கும் இங்கிலாந்து பத்திரிக்கையாளர் பியர்ஸ் மார்கனுக்கும்  டிவிட்டர் யுத்தம் நடந்துவரும் வேளையில், மார்கனை கிண்டலடித்து முன்னாள் ஆஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் பிரட்லீ தனது ட்விட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் வெறும் இரண்டு பதக்கங்களை வென்றதைக் கொண்டாடுவது அவமானமாக இல்லையா என்று இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளரான பியர்ஸ் மார்கன் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்
1sport
அதற்கு பதிலடியாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டரில் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பை வெல்லவில்லை. ஆனாலும் நீங்கள் இன்னும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இது உங்களுக்கு அவமானமாக இல்லையா? என்று கேட்க பிரச்சனை சூடுபிடித்தது.
இந்நிலையில் மார்கன், இந்தியா ஒலிம்பிக்கில் தங்கள் வெல்லும்முன்பு இங்கிலாந்து கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வென்றுவிடும், 10 லட்சம் பெட் வச்சுக்கலாமா? என்ற ரீதியில் ஒரு சவால் விடுக்க, அதை கிண்டல் செய்து சேவாக் பதிலுக்கு “கிளம்பு காத்து வரட்டும் என்ற ரேஞ்சுக்கு அவரை கீழே இறக்கி ஒரு ட்வீட் போட… நெட்டிசன்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.
இப்போது சேவாக்குக்கு ஆதரவாக முன்னாள் ஆஸி.வேகப் பந்து வீச்சாளர் பிரட்லீயும் தன் பங்குக்கு மார்கனை கலாய்த்துள்ளார்.
மார்கனுக்கும் பிரட்லீக்கும் இடையே ஏற்கனவே ஒரு டெர்ரரான ஃப்ளாஷ்பேக் இருக்கிறது.
பிரட்லீ கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது அவரை சீண்டிய மார்கனை, பிரட்லீ தன் வேகபந்தை சமாளிக்குமாறு சவால் விடுத்து அழைத்து, மைதானத்தில் பல ஆயிரம் மக்கள் மத்தியில் வைத்து தனது பந்துச்சால் அவரை நையப்புடைத்தார்.
இச்சம்பவத்தில் மார்கனின் விலா எலும்பு முறிந்தது. அந்த சம்பவத்தை   மார்கனுக்கு நினைவுபடுத்திய ப்ரட் லீ, “உன்னை வச்சு செஞ்சேனே அது மறந்துபோச்சா” என்ற தொனியில் ஒரு ட்வீட் போட்டு அவரை உசுப்பேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.