டில்லி

ந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாகப் பலகலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது

இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகங்களை யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு பட்டியலிட்டு உள்ளது. இவ்வாறு போலி பல்கலைக்கழகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் எந்த டிகிரியையும் (பட்டம்) வழங்க அனுமதி இல்லை எனவும் யு ஜி சி கூறியுள்ளது.

யு.ஜி.சி. செயலாளர் மணிஷ் ஜோஷி,

‘ஏராளமான நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக ள் பட்டங்களை வழங்கி வருவதாக யு.ஜி.சி.க்கு தெரிய வந்துள்ளது. அந்த பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படவோ செல்லுபடியாகவோ செய்யாது. மேலும் இந்த பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை’

எனத் தெரிவித்து உள்ளார்.

டில்லியில் மட்டும் போலியானவை எனப் பட்டியலிடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

அதாவது அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம், வர்த்தக பல்கலைக்கழகம் லிமிடெட், ஐ.நா. பல்கலைக்கழகம், தொழிற்கல்வி பல்கலைக்கழகம், ஏ.டி.ஆர். மத்திய நீதித்துறை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மிக பல்கலைக்கழகம்) ஆகிய பல்கலைக்கழகங்கள் போலியானவை என அறிவிக்கப்பட்டு உள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக யு.ஜி.சி. கூறியுள்ளது.  தவிர கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளம், மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யு.ஜி.சி. கூறியுள்ளது.

மாணவர்கள் மத்தியில் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள இந்த போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.