2 வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட உதயநிதி..!

Must read

கடந்த மே மாதம், பிரபல நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நிலையில், தற்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுகொண்டுள்ள உதயநிதி , இதுகுறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு

“கொரோனா தொற்றுக்கு எதிரான போர்க்களத்தில் தடுப்பூசியே முதல்வரிசை பாதுகாப்பு ஆயுதம்”. ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், இன்றைய தினம் 2-வது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டேன். தடுப்பூசியிட்டுக்கொள்வோம், கொரோனாவை விரட்டுவோம்… நன்றி”. என பதிவிட்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்பது கிடையாது. ஒருவேளை தொற்று ஏற்பட்டாலும் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. எனவே மத்திய – மாநில அரசுகள் மக்களை காப்பாற்ற எடுக்கும் முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

More articles

Latest article