இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை கஸ்தூரி….!

Must read

நடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து சினிமாத்துறையில் உள்ள அவர் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.

முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி விட்டார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

தற்பொழுது இவர் சர்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதாவது சினிமா ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கேள்வி எழுப்பும் பலருக்கு பதில் அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அரசியல் சார்ந்த மற்றும் சமூக நலன் சார்ந்த கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று கஸ்தூரி தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

More articles

Latest article