மும்பை:

காராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு வேண்டும் என்று கூட்டணி கட்சியான சிவசேனா கறாராக கூறி வருவதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த 21ந்தேதி நடைபெற்றது. அங்கு  பாஜக 164 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுகளிலும் போட்டியிட்டது. இதில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா கட்சி 56 இடங்களையும் கைப்பற்றி உள்ளது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145  இங்கள் தேவையான நிலையில், பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்பபு நிலவி வருகிறது.

இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே,  ஏற்கனவே  பாஜக தலைவர் அமித்ஷா எனது இல்லத்துக்கு வந்தபோது, ஆட்சி அதிகாரம் குறித்து ஆலோசித்தோம், அதன்படி, ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு வேண்டும்…அதை வலியுறுத்தும் நேரம் இதுதான் என்றவர், பாஜகவை விட நாங்கள் குறைவான தொகுதியில் போட்டியிட்டிருக்காலம் என்றவர், எப்போதும், அவர்களுடன் இணக்கமாக செல்ல முடியாது, தங்களது கட்சியும் மாநிலத்தில் வளர வேண்டுமானால், ஆட்சி அதிகாரம் தேவை என்று கூறினார்.

உத்தவ் தாக்கரேவின் கறாரான பேச்சு, பாஜக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இரு கட்சி தலைவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.