‘கொலைகாரன்’ படத்துக்கு கிடைத்த யு/ஏ சான்றிதழ்…!

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள படம் ‘கொலைகாரன்’ . இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

அர்ஜூன் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஒருதலை காதலுக்காக பல கொலைகளை செய்யும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வித்தியாசமாக அறிவித்தது. அதாவது, படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் முதலில் ரீலிஸ் தேதி 17-ம் தேதி என்று தொடங்கி, பல தேதிகள் அறிவிக்கப்படும். இறுதியாக ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகையான ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘கொலைகாரன்’ வெளியாக உள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் ‘கொலைகாரன்’ படத்தை பார்த்த சென்சார் குழு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரித்திருக்கும் இப்படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார். விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: arjun, censor . UA Certificate, kolaikaran, vijay antony
-=-