பிபா உலகக்கோப்பை: 17 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கான  கால்பந்து போட்டி இன்று தொடக்கம்!

டில்லி,
17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது.
இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை இந்திய கால்பந்து சம்மேளனம் செய்துள்ளது.

இன்று தொடங்க இருக்கும் போட்டி வரும் 28ந்தேதி வரை நடைபெற உள்ளது.   இந்தியாவின் கொச்சி, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் தலைநகர் டில்லியில் கோலாகலமாக விழா தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து முதல் போட்டியாக ஏ பிரிவில் உள்ள கொலம்பியா-கானா அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் இந்தியா-அமெரிக்கா அணிகள் இடயே போட்டி நடைபெற உள்ளது.

அமர்ஜித் சிங் தலைமையிலான இந்த அணியில் தீரஜ் சிங், பிரப்சுகான் கில், சன்னி தாலிவால், அன்வர் அலி, சஞ்சீவ் ஸ்டாலின், ஹென்றி ஆண்டனி, ஷாஜஹான், நோங்தம்பா, ராகுல் பிரவீண், ரஹிம் அலி, அனிகெட் ஜாதவ் ஆகியோர் நம்பிக்கைகுறிய வீரர்களாக  களத்தில் உள்ளனர்.

இன்று முதல் நாள் போட்டிகாரணமாக ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்கள் நிரம்ப ஏதுவாக 27,000 டிக்கெட்டுக்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
U-17 World Cup football match today inauguration in delhi