மும்பை:

மும்பையில் உள்ள முன்னணி பள்ளிகளில் எல்.கே.ஜி சேருவதற்காக 2 வயது குழந்தைகள் நேர்கானல் பயிற்சி வகுப்புக்கு செல்கின்றனர். இந்த பயிற்சிக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பெற்றோர் செலவு செய்கின்றனர்.

2 ஆண்டுகளுக்கு இந்த பயிற்சி வகுப்புக்கு செல்ல வேண்டிய நிலை குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நேர்காணல் நடத்துவது சட்டவிரோதம் என்ற விதி உள்ளது. இந்த பயிற்சியை பொது அறிவுப் பள்ளி, விவ £தப் பள்ளி என்று பல சங்கேத வார்த்தைகளில் அழைக்கப்படுகிறது.

இந்த பாடம் நடத்தும் ஆசிரியர் வெளிப்படையாக தன்னை பற்றி விளம்பரப் படுத்துவது கிடையாது. ஆனால், இத்தகைய ஆசிரியர்களை பற்றி அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இவர்களுக்கு என்று தனி மவுசு எப்போதும் உண்டு.

குழந்தைகளின் இந்த பருவத்தில் அவர்களுக்கு தேவைப்படும் மன ரீதியான தேவைகளை தவிர்த்து கற்பிக்கும் பழக்கத்தை பெற்றோர் புகுத்துகின்றனர். இது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். முன்னணி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதை விட இந்த பயிற்சி பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது மிக கடினமாக உள்ளது.

பயிற்சி பெறும் ஆர்வம் உள்ள குழந்தைகளை மட்டுமே இந்த ஆசிரியர்கள் தேர்வு செய்கின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் 12 குழ ந்தைகளுக்கு நேர்காணல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மும்பையில் உள்ள கத்திட்ரல், ஜான் குனூன் பள்ளி, ஜேபி பெடிட் பெண்கள் பள்ளி போன்ற முன்னணி பள்ளிகளில் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று உதத்ரவாதம் அளித்து நேர்காணல் பயிற்சியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கு அந்த பயற்சி நிறுவனங்கள் நூறு சதவீதம் உத்தவாதம் அளிக்கின்றன.

மாணவர் சேர்க்கையில் ஒரு பகுதியாக நேர்காணல் நடத்துவது சட்டவிரோதமான செயல் என்று அரசு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன.

இதற்கிடையில் டெல்லியில் அரசு நிலத்தில் இயங்கும் 298 தனியார் பள்ளிகள் அருகில் வசிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து சேர்த்துக் கொள்ள தடை விதித்த டெல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆம்ஆத்மி அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மீதான விசாரணை வரும் 27ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.